×

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொண்டுள்ளது: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேய்லீ மெகெனானி, கொரோனா மருத்துவப் பரிசோதனையைப் பொறுத்தவரை நாங்கள் 4 கோடியே 20 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். இரண்டாவது இடத்தில் அதிக கொரோனா சோதனையில் இந்தியா 1 கோடியே 20 லட்சம் பேருக்கு சோதனை நடத்தியுள்ளது. 2009ல் ஒபாமா-பிடென் கூட்டணி ஆட்சியில் எச்1 என்1 ஃப்ளூவின் போது மாநிலங்கள் டெஸ்ட்டிங்கை நிறுத்தவும் தனிப்பட்ட நோய் பாதிப்பு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

ஆனால் மாறாக தற்போதைய அதிபர் டிரம்ப் கொரோனா பரிசோதனையில் உலகில் முன்னிலை வகிக்கிறார். வென் ட்டிலேட்டர்களிலும் அமெரிக்கா டிரம்ப் தலைமையின் கீழ் முன்னிலை வகிக்கிறது. 13 வாக்சின்களில் ஒன்று 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனைக் கட்டத்திற்குச் சென்றுள்ளது. மருந்தின் பயன்கள் அசாதாரணமானதாகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உள்ளது, என்று கூறியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில்   35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 10 லட்சத்தையும், பலி  25 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,White House ,United States ,corona test , USA, India, Corona, Experiment, White House
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி